News August 6, 2025
ஆகஸ்ட் 6: வரலாற்றில் இன்று

*1945 – 2ம் உலகப்போரில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி மீது அமெரிக்கா அணு குண்டுகளை வீசியதில் 70,000 பேர் கொல்லப்பட்டனர். *1996 – செவ்வாயில் இருந்து தோன்றியதாகக் கருதப்படும் ALH 84001 என்ற விண்கல் ஆரம்பகால உயிரினங்கள் பற்றிய தகவலைக் கொண்டிருப்பதாக நாசா அறிவித்தது. *2012- நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கோளில் தரையிறங்கியது. *2019- முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உயிரிழந்த நாள்.
Similar News
News August 7, 2025
போராட்டம் தொடரும்: தூய்மை பணியாளர்கள் அறிவிப்பு

பணி நிரந்தரம் செய்யக்கோரியும், தனியார்மய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தூய்மைப் பணியாளர்கள் 6-வது நாளாக சென்னையில் போராட்டம் நடத்துகின்றனர். இவர்களுடன் அமைச்சர்கள் K.N.நேரு, சேகர் பாபு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. தனியார்மயமானால் பணியாளர்களுக்கு ஊதியம் குறையும் எனக் கூறிய போராட்டக்குழு ஆலோசகர் குமாரசாமி, அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஒத்துக்கொண்டதாகவும் கூறினார்.
News August 6, 2025
படுக்கைக்கு முன் தம்பதிகள் செய்ய வேண்டியவை ❤️

❤️முடிந்தவரை இருவரும் சேர்ந்து சாப்பிடுங்கள் ❤️பார்ட்னருக்கு உணவை பரிமாறுங்கள். ❤️சாப்பிடும்போது பார்ட்னரின் சமையலை பாராட்டுங்கள் ❤️எதிர்கால திட்டங்கள் குறித்து உரையாடுங்கள் ❤️ஒருவரை ஒருவர் குறை கூறாதீர்கள் ❤️சாப்பிட்ட பின் இருவரும் சேர்ந்து ஒரு வாக் செல்லுங்கள் ❤️நல்ல விஷயங்களை சுட்டிக் காட்டுங்கள் ❤️ஒரு நாளைக்கு 5 முறையேனும் ஐ லவ் யூ சொல்லுங்கள். உங்க ஐடியாவையும் கமென்ட் பண்ணுங்க.
News August 6, 2025
சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா?

‘குட் நைட்’ படத்தின் இயக்குநர் விநாயக் சந்திரசேகர் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பலரை அவர்கள் தேடிய நிலையில், தற்போது ஆர்யாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி செய்தது போல் வித்தியாசமான முயற்சியை ஆர்யா மேற்கொள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.