News August 6, 2025
வெள்ளத்தில் சிக்கி 11 வீரர்கள் மாயம்

உத்தரகாண்ட் மேகவெடிப்பால் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில், அங்கிருந்த ராணுவ முகாமும் அடித்து செல்லப்பட்டது. இதில் மீட்புபணிகளுக்குச் சென்ற 11 ராணுவ வீரர்கள் மாயமானதாக அஞ்சப்படுகிறது. அம்மாநிலத்தில் இன்று மதியம் 1:45 மணிக்கு மேகவெடிப்பு பெருவெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதுவரை 130 பேரை மீட்டுள்ளதாக அம்மாநில CM புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
Similar News
News March 5, 2026
விருதுநகர் : ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

விருதுநகர் மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <
News March 5, 2026
மக்களுக்கு காவல்துறை வெளியிட்ட அவசர எச்சரிக்கை!

தெரியாதவர்களிடம் ஆன்லைனில் பழக வேண்டாம் என தமிழ்நாடு காவல்துறை மக்களை எச்சரித்துள்ளது. காதல் வலையை வீசி உங்களை ஹனி ட்ராப்பில் சிக்க வைக்கலாம் என சுட்டிக்காட்டி, ஆன்லைனில் தெரியாதவர்களிடம் பர்சனல் போட்டோவை பகிர்வதையும், வீடியோ காலில் பேசுவதையும் கண்டிப்பாக தவிர்க்கவும் வலியுறுத்தியுள்ளது. மேலும், ஏமாற்றமடைந்தவர்கள் ‘1930’ என்ற அவசர எண்ணில் உதவி கோரவும் தெரிவித்துள்ளது. SHARE IT.
News March 5, 2026
அஜித் குமார் மரணம்.. திடுக்கிடும் புதிய தகவல்

அஜித் குமார் கொலை வழக்கில், நிகிதா முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார். அஜித் குமாரிடம் போலீஸ் விசாரித்தது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். நகை காணாமல் போனதாக புகாரளித்த பிறகு, மடப்புரத்தில் இருந்து தான் கிளம்பிவிட்டதாக கூறிய நிகிதா, தனது புகாரில் உண்மை இல்லை என CBI கூறவில்லை; ஆதாரம் இல்லை என்றுதான் தெரிவித்துள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.


