News August 6, 2025

‘ராஞ்சனா’ ரி-ரிலீஸ்.. தனுஷ் வழக்கு

image

‘ராஞ்சனா’ படத்தின் கிளைமாக்ஸை AI வைத்து மாற்றி ரி-ரிலீஸ் செய்ததை எதிர்த்து தனுஷுடன் சேர்ந்து வழக்கு தொடர உள்ளதாக அப்படத்தின் இயக்குநர் ஆனந்த் எல் ராய் தெரிவித்துள்ளார். 2013-ல் வெளியான இப்படத்தின் கிளைமாக்ஸில் தனுஷ் இறந்துவிடுவார். ஆனால், அவர் உயிருடன் இருந்து மகிழ்ச்சியாக படம் முடிவது போல் தற்போது எடிட் செய்யப்பட்டுள்ளது. இது வலியை தருவதாக இருவரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

Similar News

News August 6, 2025

ஆபாசமாக நடித்ததாக நடிகை மீது வழக்கு

image

பிரபல மலையாள நடிகை ஸ்வேதா மேனன் மீது, கோர்ட் உத்தரவின் பேரில் எர்ணாகுளம் போலீஸ் வழக்கு பதிந்துள்ளது. தன் படங்களில் திட்டமிட்டே ஆபாசமான, வல்கரான காட்சிகளில் நடித்துள்ளதாகவும், அந்த காட்சிகளை சோஷியல் மீடியா, ஆபாச வலைதளங்களில் பகிர்ந்து பணம், பிரபலத்தை பெற அவர் முயன்றதாக கூறி ஒருவர் வழக்கு தொடுத்திருந்தார். ரதி நிர்வேதம், சால்ட் அண்ட் பெப்பர், களிமண்ணு உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

News August 6, 2025

இரவு 10 மணிக்கு மேல் இந்தப் படம் பார்க்குறீங்களா?

image

இரவில் ஹாரர் படங்கள் பார்ப்பதை சிலர் வழக்கமாக வைத்திருப்பர். பயத்துடன் அந்தப் படங்களை பார்த்தாலும், அந்த வழக்கத்தை கைவிட மாட்டார்கள். இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், தூங்கச் செல்லும் முன்பு, அதாவது 10 மணிக்கு அத்தகைய படத்தைப் பார்ப்பது, மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் அதிகரிக்கச் செய்யும். இது தூக்கத்தை பாதிக்கும் எனத் தெரிய வந்துள்ளது. நீங்கள் இரவில் ஹாரர் படம் பார்ப்பவரா? கமெண்ட் பண்ணுங்க

News August 6, 2025

PM மோடியின் பலவீனத்தால் USA மிரட்டல்: ராகுல்

image

அமெரிக்காவில் இந்தியப் பொருள்களுக்கு <<17323903>>50% வரி <<>>என்பது நியாயமற்ற ஒன்று என ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவை நியாயமற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்குள் தள்ளும் முயற்சி எனக் கூறியுள்ள அவர், PM மோடியின் பலவீனம் இந்திய மக்களின் நலன்களை விட மேலோங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என மத்திய அரசை மறைமுக விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!