News August 6, 2025
USA vs ரஷ்யா: அணு ஆயுத போர்?

அமெரிக்கா உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையே 500-5,500 கி.மீ., தொலைவில் அணு ஆயுதங்களை நிறுத்தக்கூடாது என்ற ஒப்பந்த விதிகளை மீறி ஐரோப்பியா, ஆசியாவில் அமெரிக்கா அணு ஆயுதங்களை நிறுத்தி ரஷ்யாவை அச்சுறுத்துவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால், கடந்த 2019ம் ஆண்டிலேயே அமெரிக்கா ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிவிட்டது.
Similar News
News August 7, 2025
80 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்க: ஸ்டாலின்

இலங்கை சிறையில் உள்ள TN மீனவர்கள் 80 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்த ஆண்டில் மட்டும் 17 முறை TN மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பல முறை கடிதம் எழுதியும் நேற்று வரை கைது நடவடிக்கை தொடர்வதாக குறிப்பிட்டுள்ளார். தூதரக ரீதியாக நடவடிக்கை எடுத்து மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தியுள்ளார்.
News August 7, 2025
பகல் 12 வரை இன்று.. முக்கிய செய்திகள்!

✪கருணாநிதி <<17327639>>நினைவு <<>>நாள்: CM தலைமையில் அமைதி பேரணி
✪டிரம்புக்கு மறைமுக <<17328569>>வார்னிங்<<>> கொடுத்த PM மோடி
✪திருப்பூர் SSI <<17327420>>கொலை <<>>வழக்கில் என்கவுன்டர்
✪சூது செய்து <<17329000>>பாமகவை <<>>பறிக்க துடிக்கும் அன்புமணி.. ராமதாஸ்
✪தங்கம் விலை மேலும் ₹160 உயர்வு.. சவரன் ₹75,200-க்கு விற்பனை ✪ஆசிய <<17328075>>கோப்பை<<>>: பும்ரா அவுட்.. ரிஷப் பண்ட் டவுட்!
News August 7, 2025
கூட்டணி மாறும் மதிமுக: மல்லை சத்யா

துரை வைகோ மத்திய அமைச்சராக ஆசைப்படுவதால் பாஜகவுடன் நெருக்கம் காட்டுவதாக மல்லை சத்யா கூறியுள்ளார். மேலும், திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக, விரைவில் கூட்டணி மாறும்; அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் துரை எடுத்து வருவதாகவும் உறுதிப்பட தெரிவித்தார். மதிமுக கூட்டணி மாறப்போவதாக வெளியான செய்தியை வைகோ மறுத்த நிலையில், கடந்த 2 வாரங்களில் மோடியை துரை வைகோ 2 முறை (திருச்சி, டெல்லி) சந்தித்துள்ளார்.