News August 6, 2025
24 மணி நேரத்திற்குள் வரி விதிப்பு: டிரம்ப்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்குள் வரிவிதிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா தான் அமெரிக்காவிடம் அதிக வர்த்தகத்தில் ஈடுபடுகிறது, ஆனால் அமெரிக்கா அப்படி இல்லை எனவும், இந்தியா ஒரு சிறந்த வர்த்தக கூட்டாளி இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வாங்கி, உக்ரைன் போரை வளர்ப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Similar News
News August 6, 2025
PM மோடியின் பலவீனத்தால் USA மிரட்டல்: ராகுல்

அமெரிக்காவில் இந்தியப் பொருள்களுக்கு <<17323903>>50% வரி <<>>என்பது நியாயமற்ற ஒன்று என ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவை நியாயமற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்குள் தள்ளும் முயற்சி எனக் கூறியுள்ள அவர், PM மோடியின் பலவீனம் இந்திய மக்களின் நலன்களை விட மேலோங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என மத்திய அரசை மறைமுக விமர்சித்துள்ளார்.
News August 6, 2025
FLASH: அமெரிக்காவுக்கு இந்தியா விடுத்த எச்சரிக்கை

இந்தியப் பொருள்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது என வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. 140 கோடி மக்களின் தேவையை பூர்த்தி செய்யவே ரஷ்யாவிடம் இருந்து Oil பொருள்கள் வாங்குவதாகவும், தேச நலனை காக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளது. மேலும், வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவை போலவே இந்தியாவும் செயல்பட நேரிடும் எனவும் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
News August 6, 2025
நடிகை M.N.ராஜம் ஆசையை நிறைவேற்றிய CM ஸ்டாலின்

சென்னை அடையாறில் பழம்பெரும் நடிகை M.N.ராஜம்-ஐ CM ஸ்டாலின் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். தனியார் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்த நடிகை ராஜம், CM ஸ்டாலினை நேரில் சந்திக்க விரும்புவதாக தனது ஆசையை கூறியிருந்தார். அதனை நிறைவேற்றும் வகையில், அவரது வீட்டிற்கு நேரில் சென்ற CM ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் உடல் நலம் குறித்தும் கேட்டறிந்தனர்.