News April 6, 2024
படிப்படியாக உயர்ந்து வந்த புகழேந்தி

விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி இன்று (ஏப்ரல் 6) உடல்நிலை குறைவால் காலமானார். 1955ஆம் ஆண்டு பிறந்த புகழேந்தி அத்தியூர் திருவாதித்தினை கிராமத்தைச் சேர்ந்தவர். உளுந்தூர்பேட்டை அரசுப் பள்ளியில் பள்ளிக் கல்வியினை கற்றுள்ளார். திமுக கிளைக் கழகச் செயலாளராகவும், ஊராட்சி மன்ற தலைவராகவும், ஒன்றிய சேர்மன் ஆகவும் பின்னர் ஒன்றிய செயலாளராகவும் படிப்படியாக வளர்ந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 4, 2025
விழுப்புரத்தில் இரவு ரோந்து விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News November 3, 2025
விழுப்புரம்: தவெக தென்மேற்கு மாவட்ட நிர்வாகிகள் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டம், தவெக தென்மேற்கு மாவட்ட இளைஞர் அணியில் புதிய நிர்வாகிகள், தவெக தலைவர் விஜய் இன்று(நவ.03) மாலை அறிவித்துள்ளார். அதன்படி, மாவட்ட செயலாளராக வடிவேல், அமைப்பாளராக பிரித்திவிராஜ், இணை அமைப்பாளராக 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய மாவட்ட நிர்வாகிகளுக்கு கழகத் தோழர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 3, 2025
விழுப்புரத்தில் இரவு ரோந்து விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (நவம்பர். 03) இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.


