News August 6, 2025
வேலூர் மாவட்டத்தில் தேசிய கைத்தறி தின விழா

வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கைத்தறித்துறை இணைந்து நடத்தும் 11வது தேசிய கைத்தறி தின விழா ஆகஸ்ட் 7ஆம் தேதி குடியாத்தம் பத்மசாலிய திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில் கைத்தறித் தொழிலாளர்களின் சாதனைகள் கௌரவிக்கப்படும். கைத்தறி தயாரிப்புகள் கண்காட்சி மற்றும் விற்பனை ஏற்பாடு செய்யப்படும். பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் விரைவாக கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News August 7, 2025
வேலூர் கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் வேலை

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள 2,000 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தொடக்கமே ரூ.23,640 முதல் அதிகப்படியாக ரூ.96,395 வரை சம்பளம் வழங்கப்படும். டிகிரி முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரும் 29ஆம் தேதிக்குள் இந்த <
News August 7, 2025
வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாரத்தான் போட்டி

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பாக “DRUG FREE TN” என போதை பொருட்கள் ஒழிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், வரும் ஆகஸ்ட் 9 காலை 5:30 மணியளவில் காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தத்தில் தொடங்கி நேதாஜி ஸ்டேடியம் வரை மாரத்தான் போட்டி நடைபெறுகிறது. இதில் 15 வயது முதல் 30 வயது வரை ஆண்/பெண், 30 வயதிற்கு மேற்பட்டவருக்கான ஆண்/பெண் என 2 பிரிவுகளில் நடைபெற உள்ளது என எஸ்பி மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.
News August 7, 2025
வேலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று வட தமிழகத்தில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூரில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கையாக இருங்கள். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்