News August 6, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 478 மனுக்கள்

சுருளகோடு புனித அந்தோணியார் உயர்நிலை பள்ளி வளாகத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள் தரப்பில் மொத்தம் 478 மனுக்கள் பல்வேறு துறைகளுக்கு கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை வட்டார வளர்ச்சி அலுவலர் சசி, வட்டடாட்சியர் சுந்தரவல்லி, முன்னாள் ஊராட்சி தலைவர் விமலாசுரேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
Similar News
News November 17, 2025
குமரி மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை!

நாகர்கோவில், மீனாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறவுள்ளது. எனவே, நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வடிவீஸ்வரம், கோட்டார், மீனாட்சிபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரியமாணிக்கப்புரம், செட்டிக்குளம் சந்திப்பு, சர்குணவீதி, ராமன்புதூர், சவேரியார் கோவில் சந்திப்பு, சரலூர், வேதநகர் மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது. SHARE IT
News November 17, 2025
குமரி: நண்பர்களுடன் சேர்ந்து தாயை தாக்கிய மகன்

கொட்டில்பாடு காலனியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருபவர்கள் மரிய ஆரோக்கியம் – குளோரி தம்பதியர். இவர்கள் மகன் மரிய டைனிஷ்(35). நவ.15ல் குளோரி கடையில் இருந்தபோது, அங்கு 2 நண்பர்களுடன் வந்த மரியடைனிஷ், குளோரியிடம் பணம் கேட்டுள்ளார். குளோரி பணம் இல்லை என கூறியதால் 3 பேரும் சேர்ந்து குளோரியை தாக்கியதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குளச்சல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
News November 16, 2025
குமரி: SBI வங்கி வேலை; நாளை கடைசி நாள்

பாரத ஸ்டேட் வங்கியில்(எஸ்பிஐ) ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான 103 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 28 – 42 வயதிற்குட்பட்ட இளங்கலை, முதுகலை பட்டதாரிகள் சம்மந்தப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதில் ஆண்டுக்கு ரூ. 20 லட்சம் – ரூ.97 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்க நாளை(நவ.17) கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் <


