News August 6, 2025
அம்மா என்பது யூனிவர்சல் சொல்: அமைச்சர் ஜெயகுமார்

திமுக தரப்பில் Ex.CM ஜெயலலிதா தொடங்கிய திட்டத்துக்கெல்லாம் ‘அம்மா’ எனப் பெயர் வைத்ததைச் சுட்டிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், அம்மா என்பது ஒரு யூனிவர்சல் சொல். அது என்ன தனிப்பட்ட நபரின் பெயரா? AMMA என்பதற்கான விளக்கத்தை ஏற்கெனவே கொடுத்திருக்கிறோம் என்றார்.
Similar News
News December 9, 2025
சென்னை – நுங்கம்பாக்கம், தி.நகர் பகுதிகளில் வருமானவரி சோதனை

சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள ரிபெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்திலும், தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள வைட் ஹவுஸ் வைர நகைக்கடையிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வரி ஏய்ப்பு குறித்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், நிறுவன ஆவணங்கள் மற்றும் நிதி பதிவுகள் தீவிரமாக ஆய்வு செய்யப்படுகின்றன. சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு.
News December 9, 2025
சென்னை மக்களே 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) <
News December 9, 2025
சென்னையில் பணியில் இருந்த காவலர் கார் மோதி பலி

சென்னை மடிப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் மேகநாதான், சீருடையில் அவ்வழியாக சென்றபோது அடையாளம் தெரியாத கார் மோதி விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான காரை தேடி வருகின்றனர்.


