News August 6, 2025
தூங்குவதற்கு முன் இதை செய்யுங்க!

பருவமழை காலத்தில் தூங்குவதற்கு முன் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். தூங்குவதற்கு முன் குளிர்ந்த நீர் அல்லது பானங்களை அருந்த வேண்டாம். அது சளி மற்றும் இருமல் பிரச்னையை ஏற்படுத்தும். உங்கள் பாதங்கள் ஈரமாக இருந்தால், பூஞ்சை தொற்று ஏற்படலாம். அறை ஈரப்பதமாக இருந்தால், பாக்டீரியாக்கள் வளர்ந்து நோய் ஏற்படலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
Similar News
News August 6, 2025
டிரம்புக்கு பதில் மோடியை அழைப்பேன்: பிரேசில் அதிபர்

சமீபத்தில் பிரேசில் பொருட்கள் மீது 50% வரி விதித்தார் டிரம்ப். இந்நிலையில் இதுதொடர்பாக விவாதிக்க பிரேசில் அதிபர் எப்போது வேண்டுமானாலும் தன்னை அழைக்கலாம் என டிரம்ப் தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய பிரேசில் அதிபர் லுலா டா சில்வா, தான் டிரம்பை அழைத்து இதுபற்றி பேசபோவதில்லை என்றும், அதற்கு மாற்றாக PM மோடி, சீனா அதிபர் ஜி ஜின் பங்கை அழைத்து பேசுவேன் என தெரிவித்துள்ளார்.
News August 6, 2025
உலக சந்தையில் மீண்டும் இறங்குமுகத்தில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏறுமுகத்தில் இருந்தது. அதன் தாக்கத்தால் இந்திய சந்தையில் <<17317784>>விலை ஜெட் வேகத்தில்<<>> உயர்ந்து வந்தது. இந்நிலையில், இன்று(ஆக.6) சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ் தங்கம் 16 USD(₹1,403) குறைந்து 3,365 USD-க்கு விற்பனையாகிறது. இதனால், நாளை(ஆக.7) இந்திய சந்தையில் தங்கம் விலை சற்று குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார அறிஞர்கள் கணித்துள்ளனர். எப்படியோ குறைந்தால் சரி..!
News August 6, 2025
விஜய் தேவரகொண்டாவிடம் ED அதிகாரிகள் விசாரணை

ஐதராபாத்தில் உள்ள ED அலுவலகத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா இன்று ஆஜரானார். ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்தது தொடர்பாக பதியப்பட்ட பணமோசடி வழக்கில் விஜய் தேவரகொண்டாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முன்னதாக இதே வழக்கில் கடந்த 30-ம் தேதி நடிகர் பிரகாஷ் ராஜிடம் ED விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.