News August 6, 2025

வேலூர் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

வேலூர் மாவட்ட காவல்துறையால் இன்று(ஆக.5) இரவு ரோந்து பணியில் ஈடுபட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, வேலூர் மற்றும் கடலூர் சாலைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு கட்டுப்பாட்டு அறை அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள காவல் அதிகாரிகளுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 5, 2026

விருதம்பட்டு காவல் நிலையத்தில் 4 போலீசார் இடமாற்றம்

image

வேலூர் விருதம்பட்டு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பரத், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத், தலைமை காவலர் சுரேந்தர், முதல்நிலை காவலர் முகேஷ் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் அவர்களை திடீரென இடமாற்றம் செய்து நேற்று எஸ்பி சிவராமன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் பரத் தர்மபுரிக்கும், கோபிநாத், சுரேந்தர், முகேஷ் ஆகிய 3 பேரும் கிருஷ்ணகிரிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News March 5, 2026

வேலூர்: ரயில்வேயில் 5349 காலியிடங்கள் – NO EXAM!

image

வேலூர் மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23-ம் தேதிக்குள் இங்கே<> கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். உடனே அனைவருக்கும் SHARE!

News March 5, 2026

வேலூர்: ஆட்சியர் இன்று கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள்!

image

வேலூர் மாவட்டம் காட்பாடி விருதம்பட்டு பகுதியில் இன்று(மார்ச் 5) காலை 10 மணி அளவில் செல்ஃபி பாயின்டை கலெக்டர் சுப்புலட்சுமி திறந்து வைக்க உள்ளார். தொடர்ந்து 10:30 மணியளவில் காட்பாடி செங்குட்டை பகுதியில் ரிங் ரோடு அமைக்க அடிக்கல் நாட்டுகிறார். இதில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!