News August 5, 2025
BREAKING: நெல்லையில் மாணவனுக்கு அரிவாள் வெட்டு

நெல்லை, சேரன்மகாதேவியை சேர்ந்த 16 வயது மாணவன் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வருகிறார். மாணவி ஒருவரை இன்ஸ்டாகிராமில் பழகி காதலித்ததாக கூறப்படுகிறது. வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் மாணவி வீட்டில் கண்டித்துள்ளனர். இந்நிலையில் மாணவியின் உறவினர்களான 5 சிறார்கள் இன்று மாணவனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதுக்குறித்து சேரன்மகாதேவி போலீசார் விசாரணை.
Similar News
News August 7, 2025
நெல்லை: 10th PASSக்கு.. ரயில்வே வேலை! Apply…

நெல்லை மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6,238 டெக்னீசியன் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஆகஸ்ட்.07) கடைசி நாளாகும். 10, 12ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்கள் இங்கே <
News August 7, 2025
நெல்லையில் இன்று கைத்தறி தின கண்காட்சி

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் விடுத்துள்ள அறிக்கை: பதினோராவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நாளை 7ம் தேதி சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது. நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கபட உள்ளது. நெசவாளர் கூட்டுறவு சங்க கைத்தறி ஜவுளிகள் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்படுவதால் பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.
News August 6, 2025
நாரணம்மாள்புரம் பகுதியில் குவாரிக்கு தடையில்லா சான்று

தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், திருநெல்வேலியைச் சேர்ந்த முகமது சலீம் பாதுஷாவுக்கு நாரணம்மாள்புரம் பகுதியில் ஸ்டோன் மற்றும் கிராவல் குவாரி நடத்துவதற்கு சுற்றுச்சூழல் தடையில்லா சான்று வழங்கியுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://parivesh.nic.in இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ஆணையம் தெரிவித்துள்ளது.