News August 5, 2025
தனி நபர் எவ்வளவு நகைக் கடன் வாங்கலாம்?

தங்கம், வெள்ளி நகைக் கடன் வாங்குபவர்களுக்கு ரிசர்வ் வங்கி வரம்பு நிர்ணயித்துள்ளது. அதன்படி, ஒருவர் 1 கிலோ வரை தங்க நகைகள், 50 கிராம் வரை தங்க நாணயங்களை அடமானம் வைக்கலாம். இதேபோல், 10 கிலோ வரை வெள்ளி நகைகள், அரை கிலோ வரை வெள்ளி நாணயங்களை அடகு வைக்க முடியும். கடன் வழங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். மேலும், தங்கத்திற்கு அதன் மதிப்பில் 85% வரை கடன் வாங்க முடியும். SHARE IT.
Similar News
News August 6, 2025
போலீஸ் ஸ்டேஷனிலும் சட்டம் ஒழுங்கு இல்லை: EPS

போலீஸ் ஸ்டேஷனில் கூட இல்லாத சட்டம் ஒழுங்கிற்கு என்ன பதில் வைத்துள்ளார் ஸ்டாலின் என EPS கேள்வி எழுப்பியுள்ளார். SSI சண்முகவேல் படுகொலை, கோவை போலீஸ் ஸ்டேஷனில் ஒருவர் தற்கொலை உள்ளிட்ட சம்பவங்களை சுட்டிக்காட்டி திமுக அரசை EPS விமர்சித்துள்ளார். சீர்கெட்ட சட்டம் ஒழுங்கைப் பற்றி யாரும் பேசக் கூடாது என்பதற்கான Diversion Tactic மட்டுமே ஸ்டாலின் செய்துவருவதாகவும் சாடியுள்ளார்.
News August 6, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்திற்கு தடையில்லை: SC

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்திற்கு தடையில்லை என்று SC தீர்ப்பளித்துள்ளது. ‘அம்மா மருந்தகம்’ உள்ளிட்ட 45 அரசு திட்டங்களுக்கு பெயர் பயன்படுத்தியது குறித்த ஆவணங்களை அரசு தரப்பு தாக்கல் செய்தது. இதனையடுத்து, நீதிமன்றம் ஒன்றும் அரசியல் சண்டைக்கான களம் அல்ல எனக் கூறி, வழக்குத் தொடர்ந்த அதிமுக எம்பி சி.வி.சண்முகத்திற்கு ₹10 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. இது திமுகவுக்கு வெற்றியாக பார்க்கப்படுகிறது.
News August 6, 2025
இனி சாரா டெண்டுல்கர் ஆஸி. அரசின் Brand Ambassador!

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் ஆஸ்திரேலிய சுற்றுலா துறையின் Brand Ambassador-ஆக தேர்வாகியுள்ளார். இன்ஸ்டாவில் மில்லியன் கணக்கில் ஃபாலோயர்களை கொண்டுள்ள அவருக்கு சோஷியல் மீடியாவில் நல்ல வரவேற்பும் உள்ளது. இதனால், இந்தியர்களை அதிக அளவில் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வரும் முயற்சியாக, $130 மில்லியன் மதிப்பிலான திட்டத்திற்காக சாராவை ஆஸி. அரசு தேர்வு செய்துள்ளது.