News August 5, 2025
‘கடைசி விவசாயி’ படக்குழுவின் அடுத்த படைப்பு

காக்கா முட்டை, கடைசி விவசாயி போன்ற படங்களை இயக்கிய மணிகண்டனின் அடுத்த படத்தை பார்க்க சினிமா ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில் அவரது அடுத்த படைப்பு குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.’முத்து என்கிற காட்டான்’ என்ற வெப் தொடரை அவர் இயக்கி, அதனை விஜய் சேதுபதி தயாரித்து நடித்துள்ளார். ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு ஆகியோர் இதில் நடித்துள்ளனர். விரைவில் ஜியோ ஹாட்ஸ்டாரில் இந்த வெப் சீரிஸ் வெளியாக உள்ளது.
Similar News
News March 18, 2026
கம்பம்: தவறி விழுந்த தூய்மை பணியாளர் பரிதாப பலி

தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து நேற்று கம்பம் வார சந்தை நுழைவு வாயிலில் உள்ள ஆர்ச்சில் இருந்த அரசியல் தலைவர்களின் புகைப்படத்தினை கம்பம் நகராட்சி தூய்மை பணியாளர் மணிகண்டன் (36) என்பவர் மறைத்துவிட்டு கீழே இறங்கும் போது தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து கம்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
News March 18, 2026
ஈரோட்டில் வசமாக சிக்கிய ரூ.20.30 லட்சம்: பறக்கும் படை அதிரடி!

ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரு நாட்களில் தேர்தல் பறக்கும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரூ.20,35,120 பறிமுதல் செய்யப்பட்டது. இதில் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்ததன் அடிப்படையில், 19 லட்சத்து 10 ஆயிரத்து 290 ரூபாய் உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள தொகை குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்களே 50ஆயிரம் ரூபாய்க்கு மேல் சரியான ஆவணத்துடன் எடுத்து செல்லவும்.