News August 5, 2025
அம்பத்தூரில் ஷாக்கான குடும்பம்!

அம்பத்தூரைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவரது வீட்டில் 2 மாதத்திற்கு ஒருமுறை சராசரியாக 450 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 2 மாதத்துக்கு ஒருமுறை ரூ.2.000 வரை மின்கட்டணம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நந்தகுமார் வீட்டில் ஜூன், ஜூலை மாத கணக்கீட்டின்படி 8,370 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதற்காக ரூ.91,993 மின்கட்டணம் வந்துள்ளது. இதை கண்டு அக்குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
Similar News
News August 6, 2025
சென்னை: பேருந்தில் Luggage-ஐ மறந்துவிட்டீர்களா? NO WORRY

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்?, என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க.
News August 6, 2025
சென்னையில் செஸ்தொடர் ஒத்திவைப்பு

சென்னை ஹையாத் நட்சத்திர விடுதியில் இன்று தொடங்கவிருந்த சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஹையாத் நட்சத்திர விடுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. விடுதியில் தங்கியிருந்த வீரர்கள் அனைவரும் பாதுக்காப்பாக வேறு இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் தொடர் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
News August 6, 2025
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; 17 பேரின் குண்டர் சட்டம் ரத்து

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 27 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் நாகேந்திரன் உட்பட 17 பேர் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, அவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் கைதான 27 பேரில் 17 பேர் மீது குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.