News August 5, 2025
தவெக 2-வது மாநாடு: TVKவினருக்கு விஜய் கோரிக்கை

மதுரை மாநாட்டுக்கு தவெகவினர் பொறுப்புடனும், பாதுகாப்புடனும் கலந்துக் கொள்ளுமாறு விஜய் கேட்டுக்கொண்டுள்ளார். தவெகவின் 2-வது மாநில மாநாடு வரும் 25-ம் தேதி மதுரையில் நடைபெறுவதாக இருந்தது. விநாயகர் சதுர்த்தி வருவதால் தேதியை மாற்ற போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. அதனை ஏற்று வரும் 21-ம் தேதி அதே பிரம்மாண்டத்தோடும், கூடுதல் உற்சாகத்தோடும் மாநாடு நடைபெறவுள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 6, 2025
மாதத்தில் 31 நாள்கள் இருக்க.. ஏன் ரீசார்ஜ் மட்டும் 28 நாள்?

மாதத்தில் 31 நாள்கள் இருக்க, ஏன் ரீசார்ஜ் பிளான்கள் 28 நாள்கள் மட்டுமே இருக்கிறது என யோசித்ததுண்டா? இது ஒரு வியாபார யுக்தி. ஒரு வருடத்தில் 12 முறை 28 நாள் ரீசார்ஜ் செய்தால், வருடத்திற்கு 336 நாள்களுக்கே மட்டுமே சேவை கிடைக்கும். மீதமுள்ள 29 நாள்களுக்காக மீண்டும் ரீசார்ஜ் செய்வோம். ஆக, 12 மாதங்கள்தான் என்றாலும், 13 முறை ரீசார்ஜ் செய்வோம். நமக்கு ஒரு மாதம் நஷ்டம்.. நிறுவங்களுக்கு லாபம்!
News August 6, 2025
‘வேணும் மச்சா பீஸ்’.. கோபி- சுதாகரின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

யூடியூபர்கள் கோபி- சுதாகர் நடிப்பில் உருவாகியுள்ள ‘‘ஓ காட் பியூட்டிஃபுல்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘வேணும் மச்சா பீஸ்’ ப்ரோமோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இதனை முன்னிட்டு, ஒரு போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் பாட்டை பாடியவரின் முகத்தை காட்டாமல், அவரின் Frame மட்டும் வைக்கப்பட்டுள்ளது. அது யாராக இருக்கும் என பலரும் Guess பண்ணி வரும் நிலையில், நீங்க என்ன நினைக்கிறீங்க?
News August 6, 2025
போலீஸ் ஸ்டேஷனிலும் சட்டம் ஒழுங்கு இல்லை: EPS

போலீஸ் ஸ்டேஷனில் கூட இல்லாத சட்டம் ஒழுங்கிற்கு என்ன பதில் வைத்துள்ளார் ஸ்டாலின் என EPS கேள்வி எழுப்பியுள்ளார். SSI சண்முகவேல் படுகொலை, கோவை போலீஸ் ஸ்டேஷனில் ஒருவர் தற்கொலை உள்ளிட்ட சம்பவங்களை சுட்டிக்காட்டி திமுக அரசை EPS விமர்சித்துள்ளார். சீர்கெட்ட சட்டம் ஒழுங்கைப் பற்றி யாரும் பேசக் கூடாது என்பதற்கான Diversion Tactic மட்டுமே ஸ்டாலின் செய்துவருவதாகவும் சாடியுள்ளார்.