News August 5, 2025

திருவள்ளூர்: போனில் இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டாம்

image

உதவித்தொகை என்ற பெயரில் வரும் பொய்யான குறுஞ்செய்திகளை நம்பி அதிலுள்ள லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என திருவள்ளூர் மாவட்ட காவல் துறை தனது சமூக வலைதளத்தில் விழிப்புணர்வு பதிவு வெளியிட்டுள்ளது. மேலும் பண இழப்பு தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஷேர் பண்ணுங்க.

Similar News

News August 5, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. *இரவில் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்*.

News August 5, 2025

திருவள்ளூரில் விரைவு ரயில்கள் நிறுத்த கோரிக்கை

image

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் 11 ரயில்கள் மட்டுமே நின்று செல்கின்றன. இதனால் தினசரி பயணியர் மற்றும் நீண்ட துார பயணிகள் அவதி அடைகின்றனர். எனவே திருவள்ளூர் ரயில் நிலையத்தில், கோவை, பிருந்தாவன், இன்டர்சிட்டி, லால்பாக், லோகமான்ய திலக் டெர்மினஸ், கச்சேகுடா, நீலகிரி, திருவனந்தபுரம், மங்களூரு ஆகிய ஒன்பது விரைவு ரயில்களும் நின்று செல்ல அனுமதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News August 5, 2025

திருவள்ளூர்: சனி தோஷம் நீங்க செல்ல வேண்டிய கோயில்

image

திருவள்ளுர் மாவட்டம் பூவிருந்தவல்லியில் உள்ளது திருக்கச்சி நம்பிகள் சமேத வரத ராஜ பெருமாள் கோயில். வைணவர்களில் முக்கியமான நபரான ராமானுஜரின் குருவான திருக்கச்சி நம்பிகளுக்கு பெருமாள் மீது இருந்த பக்தி காரணமாக ஏழரை வருடங்கள் பிடிக்க வேண்டிய சனி ஏழரை நாழிகையில் விலகிச் சென்றது. சனி தோஷத்தை பக்தியால் வென்றவர் என்பதால், இங்கு சென்று வழிபட்டால் சனி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!