News August 5, 2025
மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி

முதுகுளத்தூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சித்திரவேல் (50) இவர் கடந்த 1ம் தேதி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இவருக்கு நிவாரணம் பெற கடந்த 3 நாளாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காளான் முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் வந்து அரசு நிதியை சித்திரவேல் மனைவி சுமதியிடம் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
Similar News
News August 7, 2025
ராமநாதபுரம்: 10th படித்திருந்தால்.. ரயில்வே வேலை

ராமநாதபுரம் மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6,238 டெக்னீசியன் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஆகஸ்ட்.07) கடைசி நாளாகும். 10, 12ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்கள் <
News August 7, 2025
இராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு சங்க உதவியாளர் வேலை

இராமநாதபுரம் கூட்டுறவு துறையின் இயங்கும் சங்கங்கள் (ம) வங்கிகளில் உள்ள உதவியாளர்/ இளநிலை உதவியாளர் 32 பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, (ஆகஸ்ட் 6) முதல் விண்ணப்பம் தொடங்கியுள்ளது. மாவட்ட கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் உதவியாளர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் நடைபெறும். இதனை www.drbramnad.net என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
News August 7, 2025
ராமநாதபுரம்: இந்தியன் வங்கியில் வேலை..இன்று கடைசி நாள்..APPLY

ராமநாதபுரம் மக்களே, பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில், அப்ரண்டீஸ் பணிக்கு தமிழ்நாடு உட்பட மொத்தமாக 1500 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி படித்தவர்கள் இந்த வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்று (ஆகஸ்ட்.07) கடைசி நாளாகும். இந்த வேலைக்கு ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க <