News August 5, 2025
மக்களை ஏமாற்றும் கட்சி திமுக: இபிஎஸ்

திமுகவை போல் மக்களை ஏமாற்றும் கட்சி அல்ல அதிமுக என EPS தெரிவித்துள்ளார். தென்காசியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளுக்கு பின்பு தான் மக்கள் மீது திமுகவுக்கு அக்கறை வந்துள்ளதாக தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தியது தான் திமுக அரசின் சாதனை என்றும், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அம்மா மினி கிளினிக் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும் எனவும் தெரிவித்தார்.
Similar News
News March 8, 2026
எந்திரன் படத்தில் வந்தது நிஜமாகவே நடக்கப்போகுது!

எந்திரன் படத்தில் சிட்டி ரோபோவை உருவாக்கிய வசி, அது போர் சமயங்களிலும் பயன்படும் என கூறியிருப்பார். அதுபோல, எதிர்காலப் போர்களில் AI பங்கு அதிகமாக இருக்கும் எனவும், போர்க்களத்தில் சரியான முடிவுகளை எடுக்கவும், வெற்றிபெறவும் AI உதவும் என்றும் இந்திய முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுஹான் கூறியுள்ளார். அத்துடன் ரோபோக்கள் போர்தொழில் பழகும் நிலையும் உருவாகலாம் என நிபுணர்கள் சொல்கின்றனர்.
News March 8, 2026
தமிழக தேர்தல்: ECI வெளியிட்ட புதிய அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி வரும் 15 (அ) 16-ம் தேதிகளில் வெளியாகும் என கூறப்படும் நிலையில், ECI புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ₹40 லட்சத்துக்கும் மேல் செலவழித்தால், ஊழலாக கருதப்படும் என்று ECI எச்சரித்துள்ளது. மேலும், அரசியல் கட்சிகள் வேட்பாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகள் கண்காணிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
News March 8, 2026
USA, இஸ்ரேலுக்கு புதிய செக்

பிப்.28-ம் தேதி இஸ்ரேல், USA நடத்திய தாக்குதலில் ஈரானின் மினாப் நகரில் உள்ள பெண்கள் தொடக்கப்பள்ளியில் <<19292495>>165 மாணவிகள்<<>> பலியாகினர். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இத்தாக்குதலை போர் குற்றமாக கருதி விசாரிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை வைத்துள்ளது. அத்துடன் 165 மாணவிகள் பலியான இத்தாக்குதலுக்கு காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.


