News August 5, 2025

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு முகாம்

image

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் விப்ரோ நிறுவனம் சார்பில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வருகின்ற ஆகஸ்ட் 9 ம் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள பி.ஆர்.பி கட்டிடத்தின் 7வது மாடியில் காலை 9 மணிக்கு முகாம் நடைபெறும். 2024 மற்றும் 2025 கல்வி ஆண்டில் டிப்ளமோ முடித்தவர்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்குபெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கு பகிரவும்*

Similar News

News August 6, 2025

வேலூர்: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

image

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 7 இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 7 நான்கு சக்கர வாகனங்கள் உடைக்க தகுதியுள்ள நிலையில் (scrab) நாளை ஆகஸ்ட் 7-ம் தேதி காலை 9 மணிக்கு வேலூரில் உள்ள நேதாஜி விளையாட்டு மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. இதில் பங்கேற்க ரூ.100 கட்டணம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்கலாம் என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.

News August 6, 2025

வேலூர் மாவட்ட இரவு ரோந்து பணி விபரம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஆகஸ்ட் 06) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தங்களது ஆபத்து காலங்களில் மேலுள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 6, 2025

வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி முக்கிய அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ரேஷன் கார்டு சிறப்பு திருத்த முகாம் நடைபெற உள்ளது. இதில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் மேற்கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். *இது போன்ற முகாமில் அளிக்கும் மனுக்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். ரேசன் அட்டை தாரர்களுக்கு பகிரவும்*

error: Content is protected !!