News August 5, 2025
விதைப்பதை தான் அறுக்க முடியும்: விளாசிய அஷ்வின்

4-வது டெஸ்டில் ரிஷப் பண்ட் காயமடைந்து வெளியேற நேர்ந்தது. அந்த சூழ்நிலையில் சப்ஸ்டிடியூட் களமிறங்க வேண்டுமென காம்பீர் உள்பட பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால், ‘அது ஒரு ஜோக்’ என பென் ஸ்டோக்ஸ் கிண்டலடித்தார். இந்நிலையில், நேற்று பண்ட்டின் நிலை கிறிஸ் வோக்ஸுக்கு ஏற்பட்டது. இதுபற்றி அஷ்வின், ‘நாம் என்ன விதைக்கிறோமோ அதையே அறுக்க முடியும். ஸ்டோக்ஸ் பேசும்முன் சிந்திக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
Similar News
News August 6, 2025
வயிற்றுக் கோளாறுகளை சரிசெய்யும் துலாசனம்

✦ஜீரண உறுப்புகள் நன்கு வேலை செய்யும்.
✦நுரையீரல் வலுப்பெறும்.
✦10-15 வினாடிகள் இந்த ஆசனத்தை செய்யலாம்.
✦உடலை சமநிலைப்படுத்தும் ஆற்றல் அதிகரிக்கும்.
✦வயிற்றுக் கோளாறுகளை குணப்படுத்துகிறது.
✦மிக வலிமை குறைந்த கைகள் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.
News August 6, 2025
கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவின் அடிமைகள்: EPS காட்டம்

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளை தேடிப்பிடிக்கும் நிலையில்தான் அவர்கள் உள்ளதாக EPS விமர்சித்துள்ளார். கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவுக்கு அடிமையாக இருப்பதால் ஆட்சிக்கு வக்காலத்து வாங்குவதாகவும் சாடினார். அடுத்த முறை சீட் கிடைக்காது என்பதால் மக்கள் பிரச்சனைகளுக்கு அவர்கள் போராடுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். கம்யூனிஸ்டு கட்சிகளை கொஞ்சம் கொஞ்சமாக திமுக விழுங்குவதாகவும் EPS கூறியுள்ளார்.
News August 6, 2025
ஆடி ஸ்பெஷல்: திருவக்கரை வக்ரகாளியம்மன் கோயில்!

விழுப்புரம், திருவக்கரை வக்ரகாளியம்மன் கோயிலில் சக்தியின் திருவடிவாக அம்மன் அருள்புரிகிறார். 2000-ம் ஆண்டுகள் பழமையான தேவாரப்பாடல் பெற்ற, ராஜராஜ சோழன் கல்வெட்டு இக்கோயிலில் உள்ளது. இங்கு ஒவ்வொரு பௌர்ணமி தினமும், நள்ளிரவு 12:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, ஜோதி தரிசனக் கொப்பர வழிபாடு செய்யப்படுகிறது. அம்மன் வக்கிர நிலையில் இருப்பதால் சனி, ராகு, கேது தோஷங்கள் நீங்கும் இடமாக நம்பப்படுகிறது.