News August 5, 2025
ஈரோடு: வட மாநில தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்

ஒடிசா மாநிலம், பர்கோச்சா பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் ஜக்தலா, 48. இவர் கடந்த 4 மாதங்களாக சிப்காட் பகுதியில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் காலை வேலைக்கு சென்றவர் அங்கு மேற்பார்வையாளர் இடத்தில் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியவர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து இறந்து விட்டார். இது குறித்து சென்னிமலை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 6, 2025
ஈரோடு: டிகிரி முடித்தால் போதும் SBI வங்கியில் வேலை

ஈரோடு மக்களே.., SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates(Customer Support and Sales) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆரம்ப கட்ட சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News August 6, 2025
ஈரோடு மக்களே மோசடி: காவல்துறை எச்சரிக்கை!

சமீப காலமாக இணையவழி மோசடிகள் அதிகரித்துள்ளன. இதில் உங்களுக்கு வங்கியில் இருந்து ரிவாட் பாய்ண்ட்ஸ் வந்துள்ளது என குருஞ்செய்தி மூலம் தகவல் வருகிறது. இதை க்ளிக் செய்யும்போது மோசடிக்கு உள்ளாகும் வாய்ப்புள்ளது. எனவே இது தொடர்பாக வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள், செயலிகள், மின்னஞ்சல்களை திறப்பதோ, install செய்யவோ வேண்டாம் என, ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவுத்தியுள்ளது. இதுகுறித்து புகார் அளிக்க 1930.
News August 6, 2025
சுதந்திர தின விழா குறித்து ஆலோசனைக் கூட்டம்

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கத்தில் நேற்று, ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுவது குறித்தான ஆலோசனைக் கூட்டம் அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் அரபித் ஜெயின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.