News August 5, 2025

புதுச்சேரி: பணி உயர்வை தரும் பஞ்சநதீசுவரர் கோயில்

image

புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற பஞ்சநதீசுவரர் கோயில் எனப்படும் திருவாண்டார்கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள பஞ்சநதீஸ்வரர், வடுகீஸ்வரரை தரிசித்தால் திருமணத்தடை நீங்கும், பணிஉயர்வு கிடைக்கும், செல்வம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இக்கோயிலில் தமிழ்ப்புத்தாண்டு, சிவராத்திரி போன்ற நாட்கள் மிகவும் விசேஷமானவையாகும். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க!

Similar News

News August 6, 2025

பட்டய பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

image

புதுவை கூட்டுறவு மேலாண்மை நிலையம், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்துடன் இணைந்து, ஓராண்டு கால முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி வகுப்பு நடத்த அனுமதி பெற்றுள்ளது. இப்பட்டய படிப்பு இரு பருவங்களாக நடக்கிறது. பயிற்சியில் சேர விரும்புவோர் www.tncu.tn.gov.in இணைய தள முகவரியில் வரும் 22ம் தேதி மாலை 5 மணிக்குள், ரூ.100 செலுத்தி விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News August 6, 2025

புதுவை: இந்தியன் வங்கியில் வேலை-இன்றே கடைசி வாய்ப்பு

image

புதுவை மக்களே, இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 1500 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.7) கடைசி நாளாகும். ஏதேனும் டிகிரி முடித்த நபர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.12,000 முதல் 15,000 வரை வழங்கப்படும். வங்கியில் வேலை தேடும் நபர்களுக்கு இதனை SHARE செய்து உதவுங்கள்.

News August 6, 2025

புதுச்சேரி: சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற எம்.எல்.ஏ

image

உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை முடக்கு மாரியம்மன் கோயில் வீதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் 10-கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகள் வராததால், சட்டப்பேரவையை எம்.எல்.ஏ நேரு நேற்று முற்றுகையிட முயன்றுள்ளார்.

error: Content is protected !!