News August 5, 2025
கமுதி அருகே 25 ஆடுகளை கடித்து கொன்ற தெரு நாய்கள்

கமுதி அருகே வீரமச்சான்பட்டி கிராமத்தில் தெரு நாய்கள் கடித்து 25 ஆடுகள் உயிரிழந்தது. பரசுராமன் என்பவர் 200 ஆடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். நேற்று ஆடுகளை மேய்த்துவிட்டு, பட்டியில் அடைத்து வைத்திருந்தபோது 10க்கும் மேற்பட்ட தெரு நாய்கள், 25 செம்மறி ஆடுகளை கடித்து கொன்றது. கால்நடை மருத்துவர்கள் உடற்ஆய்வு கூறு செய்தனர். பாதிக்கப்பட்டவர், நிவாரணம் வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News August 7, 2025
மீனவர்களுக்கு ஆகஸ்ட் 11 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

தொண்டி அருகே திருப்பாலைக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்கள், கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நேற்று (ஆகஸ்ட்.06) யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளால் ஊர்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்களை ஆகஸ்ட் 11 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
News August 7, 2025
ராமேசுவரம்-பனாரஸ் ரயிலுக்கு புதுக்கோட்டையில் நிறுத்தம்

ராமேசுவரத்தில் இருந்து பனாரஸுக்கு இயக்கப்படும் வாராந்திர சூப்பர்ஃபாஸ்ட் ரயில் (22535) இனி புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் (PDKT) நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 11:55 மணிக்கு ராமேசுவரத்தில் புறப்படும் இந்த ரயில், புதுக்கோட்டையில் நின்று பயணிகளுக்கு வசதி ஏற்படுத்தும். இதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளார்.
News August 6, 2025
ராமநாதபுரம்: இரவு ரோந்துப் பணி அதிகாரிகள் விவரம்

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (06-08-2025) இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்காக இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசரநிலை அல்லது சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை எதிர்கொண்டால், பொதுமக்கள் உடனடியாக காவல்துறை உதவி எண் 100-ஐ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். *உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க*