News April 6, 2024

பதற்றமான சாவடி எண்ணிக்கை வெளியீடு

image

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 371 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 0 வாக்குச்சாவடி மிகவும் பதற்றமானது என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

Similar News

News March 11, 2026

செங்கை: அதிமுக எம்.பி மாநிலங்களவையில் கோரிக்கை!

image

கல்பாக்கம் அணுசக்தி நிலையத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தனபால் நேற்று கோரிக்கை வைத்துள்ளார். நீண்ட காலமாக பணியாற்றியும் நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கப்படாத நிலை குறித்து அவர் கவலை தெரிவித்தார். அதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

News March 11, 2026

செங்கல்பட்டில் சிறுவன் துடிதுடித்து பலி!

image

வண்டலூர்: கேளம்பாக்கம் அருகே சிறுசேரி பகுதியில், அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கி கட்டிட வேலைகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சிறுசேரி பகுதியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த அடாடத் சிக்டன் (17) வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி அடாடத் சிக்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 11, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (மார்ச்-10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!