News August 5, 2025

9 மீனவர்களுக்கு 19ஆம் தேதி வரை இலங்கையில் காவல் நீட்டிபு

image

பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு நாட்டுப்படகையும் அதிலிருந்த 9 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த மாதம் 29ஆம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்களின் வழக்கு இன்று புத்தளம் நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, 9 பேருக்கும் வரும் 19ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீடித்து உத்தரவிட்டார்.

Similar News

News August 6, 2025

ராம்நாடு: FIRST TIME வேலைக்கு போறீங்களா 15,000 CONFIRM!

image

இராமநாதபுரம் இளைஞர்களே EPFO-வின் ஊழியர் வைப்பு நிதி சார்ந்த காப்பீடு (ELI) திட்டத்தின் கீழ், ₹15,000 ஊக்கத்தொகை வழங்கபடுகிறது. முதல்முறையாக EPFO-வில் பதிவுசெய்து, மாதத்திற்கு 1 லட்சத்திற்குள் சம்பாதிக்கும் புதிய ஊழியர்களுக்கு ரூ.15000 வழங்கப்படும். இரண்டு தவணைகளாக வழங்கபடுகிறது. மேலும் தகவல்களுக்கு இராமநாதபுரத்தில் உள்ள EPFO அலுவலகத்தை அனுகுங்க. வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 6, 2025

பாம்பன் மீனவர்கள் கைது.. இலங்கை கடற்படை அட்டூழியம்

image

தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவர்கள் 10 பேரையும், தொண்டியில் இருந்து நாட்டுப்படகில் மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொள்கின்றனர்.

News August 6, 2025

ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி மாநில அளவில் சாதனை

image

கமுதி அருகே செங்கப்படை அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் படித்து வரும் 7ம் வகுப்பு மாணவி நிவேதா ஸ்ரீ, திருவண்ணாமலையில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று 2ஆம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்த மாணவிக்கு நேற்று பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், மாணவியை பாராட்டி சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

error: Content is protected !!