News August 5, 2025
ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு

எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனால், தாரம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த ரயில்கள் தற்போது மீண்டும் எழுப்பூரில் இருந்து இயக்கப்படவுள்ளது. அதன்படி சென்னை எழும்பூர்- மதுரை தேஜஸ் ரயில், எழும்பூர்- புதுச்சேரி மெமு விரைவு ரயில்கள் மீண்டும் இன்று (ஆக.5) முதல் எழும்பூரில் இருந்து இயக்கப்படுகிறது.
Similar News
News August 5, 2025
சென்னையில் பால் விற்பனை உயர்வு: அமைச்சர் மனோ தங்கராஜ்

நந்தனம் ஆவின் இல்லத்தில் ஆவின் முகவர்களுக்கு உறைகலன் வழங்குதல், ஆவின் பாலகங்கள் (ம) மொத்த விற்பனையாளர்களுக்கு ஆணையை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார். பின் அவர் பேசுகையில், சென்னை போன்ற மெட்ரோ பகுதிகளில் ஆவின் பால் விற்பனை 30% உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மொத்தம் ரூ.25 கோடிக்கு விற்பனையான நிலையில், இந்த ஆண்டு சுமார் ரூ. 33 கோடிக்கு விற்பனை அதிகரித்துள்ளது என்றார்.
News August 5, 2025
அம்பத்தூரில் ஷாக்கான குடும்பம்!

அம்பத்தூரைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவரது வீட்டில் 2 மாதத்திற்கு ஒருமுறை சராசரியாக 450 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 2 மாதத்துக்கு ஒருமுறை ரூ.2.000 வரை மின்கட்டணம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நந்தகுமார் வீட்டில் ஜூன், ஜூலை மாத கணக்கீட்டின்படி 8,370 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதற்காக ரூ.91,993 மின்கட்டணம் வந்துள்ளது. இதை கண்டு அக்குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
News August 5, 2025
பெசன்ட் நகர் பீச்சில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

சென்னை IT நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண் ஒருவர் தனது நண்பர்களோடு நேற்று பெசன்ட் நகர் பீச்சுக்கு சென்றுள்ளார். அப்போது வேளச்சேரியைச் சேர்ந்த வழக்கறிஞர் சாய் கிரிதரன் தனது நண்பர்களோடு கடற்கரைக்கு சென்ற போது, அங்கு இருந்த இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார், வழக்கறிஞர் சாய்கிரிதரணை கைது செய்து 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.