News April 6, 2024
BREAKING: சம்பளம் ₹600 ஆக உயர்த்தப்படும்

மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, சிபிஎம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், மகளிர் இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும், 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாக உயர்த்துவதுடன், ஊதியமும் ₹600ஆக உயர்த்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களை அமல்படுத்துவோம், ஹிந்தி மொழித்திணிப்பை எதிர்ப்போம், விவசாய கடன் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 19, 2026
பிரபல நடிகர் காலமானார்… கண்ணீர் அஞ்சலி!

‘மிரட்டல் அடி (Kung Fu Hustle)’ படம் மூலம் இந்திய ரசிகர்களை கவர்ந்த நடிகர் புரூஸ் லியுங்கின் (77) திடீர் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1970, 80கள் முதலே குங்பூ படங்களில் கோலோச்சிய இவர் புரூஸ் லீ, ஜாக்கி சானுக்கு இணையாக தற்காப்புக்கலை உலகில் மதிக்கப்படுகிறார். இவரது மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆரோக்கியமாக இருந்த இவரின் திடீர் மறைவுக்கு என்ன காரணம் என்பது மர்மமாகவே உள்ளது.
News January 19, 2026
புருவங்கள் அடர்த்தியா வளர அருமையான TIPS

முகத்திற்கு அழகு சேர்ப்பதே இந்த புருவங்கள் தான். இவை அழகாக தெரிய, அதன் அடர்த்தி அதிகரிக்க இந்த இயற்கை வழிமுறையை பின்பற்றலாம். ஆமணக்கு எண்ணெயை தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதில் இருக்கும் புரதம், கொழுப்பு புருவங்களின் முடி வளர்ச்சிக்கு உதவும். இதை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News January 19, 2026
அதிமுக கூட்டணியில் இணையவில்லை: அறிவிப்பு

இன்று காலை சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் EPS-ஐ சந்தித்த கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு, அதிமுக கூட்டணியில் இணைந்ததாக தகவல் வெளியானது. இது தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அவர் விளக்கமளித்துள்ளார். தான் EPS-ஐ சந்திக்கவே இல்லை என்றும், சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுவதாகவும் கூறியுள்ள அவர், அதிமுக கூட்டணியில் இணையவில்லை என்பதை உறுதி செய்துள்ளார்.


