News April 6, 2024

கைதாகிறாரா லாலு பிரசாத் யாதவ்?

image

ஹேமந்த் சோரன், அரவிந்த் கெஜ்ரிவாலைத் தொடர்ந்து பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவும் சிறைக்கு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. 1995இல் போலி ஆவணங்கள் மூலம் சட்ட விரோதமாக ஆயுதங்கள் & வெடி பொருட்கள் வாங்கிய வழக்கில், லாலுவை கைது செய்ய க்வாலியர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்களவைத் தேர்தல் நடக்கவுள்ள சூழலில் இந்த நீதிமன்ற உத்தரவு பிஹாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News January 21, 2026

ராசி பலன்கள் (21.01.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News January 20, 2026

சூழ்ச்சிக்கு பலியாகாதீர்கள்: CM ஸ்டாலின்

image

திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய அறிவுறுத்தல்களை CM ஸ்டாலின் வழங்கியுள்ளார். கூட்டணி கட்சிகளில் நம்மை பிடிக்காதவர்கள் சிலர் இருக்கதான் செய்வார்கள் என்றும், அவர்கள் தேவையில்லாத கருத்துகளை கூறி கூட்டணியில் குழப்பத்தை விளைவிக்க நினைக்கலாம் என்றும் எச்சரித்துள்ளார். மேலும் அந்த சூழ்ச்சியில் சிக்கி பலியாகிவிடக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

News January 20, 2026

கவர்னர் தேநீர் விருந்தில் விசிக பங்கேற்காது: திருமாவளவன்

image

சட்டமன்றத்தை அவமதித்த கவர்னரின் போக்கை வன்மையாக கண்டிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், மரபை மீறி தேசிய கீதத்தை துவக்கத்திலேயே ஏன் இசைக்கவில்லை என்பது குதர்க்கவாதம் என்றும், கவர்னரின் செயல் திராவிடக் கருத்தியலுக்கு எதிரான ஒவ்வாமையின் வெளிப்பாடு எனவும் விமர்சித்துள்ளார். அத்துடன் குடியரசு நாளை ஒட்டி கவர்னரின் தேநீர் விருந்தில் விசிக இந்தாண்டும் பங்கேற்காது என்பதையும் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!