News August 5, 2025

புனித பயணம் மேற்கொள்ள மானியம்- ஆட்சியர் அறிவிப்பு

image

பௌத்த மதத்தை சேர்ந்தவர்கள் நாக்பூர் தீக் ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர திருவிழாவிற்கு புனித பயணம் சென்று வரும் 150 நபர்களுக்கு மானியமாக ரூ.5000 வழங்கப்படுகிறது. இதனை பெறுவதற்கு நவம்பர் 30-ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்று சென்னைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 6, 2025

திருச்சி: உங்களுடன் ஸ்டாலின் முகாமில் குவிந்த 2968 மனுக்கள்

image

திருச்சி மாவட்டத்தில் 6 இடங்களில் நேற்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. அதில் திருச்சியில் 895 மனுக்களும், துறையூரில் 194 மனுக்களும், புள்ளம்பாடியில் 552 மனுக்களும், தாளக்குடியில் 260 மனுக்களும், தண்டலைப்புத்தூரில் 541, முருங்கையில் 526 மனுக்களும் என மொத்தம் 2968 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டதாக திருச்சி மாவட்ட கலெக்டர் வே.சரவணன் தெரிவித்துள்ளார்.

News August 6, 2025

திருச்சியில் வேலை: கலெக்டர் அறிவிப்பு

image

மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் ஒரு வருட கால தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்ப படிவத்தை <>http://tiruchirappalli.nic.in<<>> என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்து, வரும் ஆக.,19ஆம் தேதிக்குள் திருச்சி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!

News August 6, 2025

ஈரோடு – திருச்சி பயணிகள் ரயில் பகுதியாக ரத்து

image

திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு – திருச்சி பயணிகள் ரயிலானது வரும் ஆக.,19-ம் தேதி காலை 8:10 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்பட்டு திருச்சி கோட்டை ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். அன்றைய தினம் மட்டும் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு இந்த ரயில் இயக்கப்படாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!