News August 5, 2025
தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களை கண்டறிந்து தமிழ் தொண்டினை பெருமைப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில் 2025-ஆம் ஆண்டிற்கான தமிழ் செம்மல் விருதுக்கு தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார்
Similar News
News August 6, 2025
கள்ளக்குறிச்சி: டிகிரி போதும்! கை நிறைய சம்பளம்

மத்திய அரசின் காப்பீடு நிறுவனத்தில் உதவியாளருக்கான 500 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 37 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 21 – 30 க்குள் இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாதம் ரூ.22,405 – 62,265 சம்பளம் வரை வழங்கப்படும். விருப்பமுடையவர்கள் வரும் ஆகஸ்ட் 17க்குள் இந்த <
News August 6, 2025
கள்ளக்குறிச்சி சி.இ.ஓ புதிய அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதிக்குள் பசுமையும் பாரம்பரியமும் என்ற தலைப்பில் இந்த கல்வி ஆண்டிற்கான கலைத் திருவிழாக்களை நடுத்திட வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு சி.இ.ஓ கார்த்திகா சுற்றறிக்கையின் மூலம் உத்தரவிட்டுள்ளார்.
News August 6, 2025
கள்ளக்குறிச்சி: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஆகஸ்ட் 6-ம் தேதி திருக்கோவிலூர் ராஜேஸ்வரி திருமண மண்டபம்,கச்சிராயப்பாளையம் V.S.A மஹால்,மாடூர் நித்தின் மஹால்,விருகாவூர் இந்திரா ரங்கசாமி மண்டபம்,எஸ்.வி.பாளையம் பஜனை கோயில் தெரு,காட்டு எடையார் சிவன் கோயில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் முகாமில் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கப்பெறாத பெண்கள் இம்முகாமில் கலந்து கொண்ட விண்ணப்பிக்கலாம்.