News April 6, 2024

‘உடன்பிறப்பே 2’ அறிவிப்பு விரைவில்

image

ஜோதிகாவின் 50ஆவது படமாக 2021 இல் வெளிவந்தது ‘உடன்பிறப்பே’ திரைப்படம். அண்ணன் – தங்கை இடையிலான நெஞ்சை உருக்கும் சென்டிமென்ட் காட்சிகள் நிறைந்த இந்த படத்தின் 2ஆம் பாகம் விரைவில் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக இயக்குநர் இரா.சரவணனுக்கு பெரிய தொகை ஒன்று முன்பணமாக கொடுக்கப்பட்டுள்ளதாம். இப்படம் அமேசான் OTT தளத்தில் நல்ல டி.ஆர்.பி. ரேட்டிங்கை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News January 28, 2026

தைப்பூசம் விடுமுறை.. வெள்ளி முதல் சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

image

தைப்பூசம், வார விடுமுறையையொட்டி வரும் வெள்ளிக்கிழமை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என TN அரசு அறிவித்துள்ளது. ஜன.30, 31, பிப்.1-ல் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. <>www.tnstc.in<<>> இணையதளம் (ம) TNSTC மொபைல் செயலியில் டிக்கெட் புக் செய்யலாம். தைப்பூசத்திற்கு முக்கிய முருகன் கோயிலுக்குச் செல்லும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 28, 2026

சில பூச்சிகள் ரீங்காரம் இடுவது ஏன்?

image

தேனீ, சில வண்டுகளின் இறக்கைகள் நொடிக்கு சுமார் 150-250 தடவை சிறகடிக்கின்றன. காற்றின் உராய்வு அதிர்வினால் நமக்கு இந்த ஒலியானது ரீங்காரமாக கேட்கிறது. இதுவே ஒரு வண்ணத்து பூச்சியாக இருந்தால் எதுவும் கேட்காது. அதன் சிறகுகள் நொடிக்கு 6-10 தடவை மட்டுமே சிறகடிக்கின்றன. இதே கொசுக்கள் என்றால், அவை நொடிக்கு சுமார் 400-800 முறை சிறகடிப்பதால் காதின் அருகில் வந்தால் மட்டுமே ’கொய்ங்’ என்ற சப்தம் கேட்கிறது.

News January 28, 2026

விஜய் கட்சியில் இணைந்த அடுத்த அதிமுக தலைவர்

image

தேர்தலையொட்டிய கட்சித் தாவல் நிகழ்வுகளால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில், அதிமுகவின் அரியலூர் முகமாக இருந்த கவிதா G.ராஜேந்திரன் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். அதிமுக அரியலூர் மாவட்டச் செயலாளர், மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை அவர் வகித்துள்ளார். அவருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்ற விஜய், தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!