News August 5, 2025

ஐடிஐ சேர்க்கைக்கான தேதி நீட்டிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர்கள் சேர்க்கைக்கான தேதி இந்த மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு பயிற்சி கட்டணம் இல்லை. மாதம் 750 ரூபாய் கல்வி உதவித்தொகை , இலவச மிதிவண்டி ,சீருடை, பயிற்சி கட்டணம் இல்லை, இலவச பேருந்து பயணம் என பல சலுகைகள் உள்ளது.

Similar News

News August 6, 2025

காஞ்சிபுரத்தில் நாளையே கடைசி!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கு காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் முதல் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். <>இந்த லிங்கில் <<>>உள்ள விண்ணப்பத்தை பதிவுசெய்து நாளை மாலை 5.45-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க! <<17317300>>தொடர்ச்சி<<>>

News August 6, 2025

காஞ்சிபுரத்தில் நாளையே கடைசி!

image

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மொத்தம் 109 கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவை முறையே காஞ்சிபுரம்-34, ஸ்ரீபெரும்புதூர்-8, உத்திரமேரூர்-31, வாலாஜாபாத்-19, குன்றத்தூர்-17ஆகும். இந்த பணிக்கு எழுத்துத் தேர்வு செப்டம்பர் 8-1ம் தேதிக்குள் நடைபெற உள்ளது. இதில் தேர்ச்சி பெறும் நபர்களுக்கான நேர்காணல் செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 6ம் தேதிக்குள் நடைபெறும். அனைவரும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News August 6, 2025

காஞ்சிபுரத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்

image

காஞ்சிபுரம், தமிழக முதல்வர் கோப்பை 2025 விளையாட்டு போட்டிகளில் நடைபெற உள்ளது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் என ஐந்து பிரிவுகளில் 25 விளையாட்டுகள் மாவட்ட அளவில் நடைபெறும். மண்டலத்தில் 7, மாநிலத்தில் 37 விளையாட்டுகள் போட்டிகள் நடைபெறும். இதற்கான ஆன்லைன் விண்ணப்பத்திற்கான QR குறியீட்டை கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்டார்.

error: Content is protected !!