News August 5, 2025

கிருஷ்ணகிரி சிலிண்டர் பயனாளிகள் கவனத்திற்கு…

image

கிருஷ்ணகிரி மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

Similar News

News August 6, 2025

ஒசூா் அருகே குழந்தை உயிரிழப்பு

image

திருவண்ணாமலையைச் சோ்ந்தவா் சிலம்பரசன். இவா் ஒசூா் பகுதியில் குடியிருந்து ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். இவரது இரண்டரை வயது மகன் பைரவன். கடந்த 31-ம் தேதி வீட்டில் குளியல் அறையில் கொதிக்கும் தண்ணீரில் தவறி விழுந்தாா். உடல் முழுவதும் காயம் அடைந்த பைரவனை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 6, 2025

கிருஷ்ணகிரி மாவட்ட துணை அமைப்பாளர் காலமானார்

image

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளராக இருந்த குட்டப்பள்ளியை சேர்ந்த ஆர். சிவகுமார் இன்று காலை 7 மணி அளவில் திடீர் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது மறைவால் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் மிகுந்த துயரத்தில் உள்ளனர். அவரது கட்சி பணி மற்றும் சமூக சேவைகள் குறித்து பலர் கூறி வருகின்றனர். மாவட்ட திமுகவினர் ஆழ்ந்த அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

News August 6, 2025

கிருஷ்ணகிரி: ரேஷன் கடைகளில் முறைகேடா? இத பண்ணுங்க!

image

கிருஷ்ணகிரி ரேஷன் கடைகளில் உரிய அளவு பொருட்கள் வழங்கவில்லை, தரமற்ற பொருட்களை விற்பது, அதிக விலை வசூலிப்பது, கடை திறக்காமல் இருப்பது, பொருட்களை வழங்க மறுப்பது, புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க அலைய வேண்டாம். <>இந்த லிங்கில்<<>> உங்கள் புகார்களை பதிவு செய்து உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துங்கள். தொடர்புக்கு 1967 (அ) 18004255901. ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!

error: Content is protected !!