News August 5, 2025

காலம் தாழ்த்துவது பேராபத்து: ஸ்டாலினுக்கு நயினார் வார்னிங்

image

திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளால் டெல்டாவின் கடைமடைப் பகுதிகளை வறட்சியில் தவிக்க விடப்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கியும் ஆறுகள், வாய்க்கால்கள், கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படுவதில்லை. இனியும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காது காலம் தாழ்த்துவது பேராபத்தில் சென்று முடியும் என்பதை ஸ்டாலின் உணர வேண்டுமென்று தெரிவித்துள்ளார்.

Similar News

News August 6, 2025

வயிற்றுக் கோளாறுகளை சரிசெய்யும் துலாசனம்

image

✦ஜீரண உறுப்புகள் நன்கு வேலை செய்யும்.
✦நுரையீரல் வலுப்பெறும்.
✦10-15 வினாடிகள் இந்த ஆசனத்தை செய்யலாம்.
✦உடலை சமநிலைப்படுத்தும் ஆற்றல் அதிகரிக்கும்.
✦வயிற்றுக் கோளாறுகளை குணப்படுத்துகிறது.
✦மிக வலிமை குறைந்த கைகள் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.

News August 6, 2025

கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவின் அடிமைகள்: EPS காட்டம்

image

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளை தேடிப்பிடிக்கும் நிலையில்தான் அவர்கள் உள்ளதாக EPS விமர்சித்துள்ளார். கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவுக்கு அடிமையாக இருப்பதால் ஆட்சிக்கு வக்காலத்து வாங்குவதாகவும் சாடினார். அடுத்த முறை சீட் கிடைக்காது என்பதால் மக்கள் பிரச்சனைகளுக்கு அவர்கள் போராடுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். கம்யூனிஸ்டு கட்சிகளை கொஞ்சம் கொஞ்சமாக திமுக விழுங்குவதாகவும் EPS கூறியுள்ளார்.

News August 6, 2025

ஆடி ஸ்பெஷல்: திருவக்கரை வக்ரகாளியம்மன் கோயில்!

image

விழுப்புரம், திருவக்கரை வக்ரகாளியம்மன் கோயிலில் சக்தியின் திருவடிவாக அம்மன் அருள்புரிகிறார். 2000-ம் ஆண்டுகள் பழமையான தேவாரப்பாடல் பெற்ற, ராஜராஜ சோழன் கல்வெட்டு இக்கோயிலில் உள்ளது. இங்கு ஒவ்வொரு பௌர்ணமி தினமும், நள்ளிரவு 12:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, ஜோதி தரிசனக் கொப்பர வழிபாடு செய்யப்படுகிறது. அம்மன் வக்கிர நிலையில் இருப்பதால் சனி, ராகு, கேது தோஷங்கள் நீங்கும் இடமாக நம்பப்படுகிறது.

error: Content is protected !!