News August 5, 2025
சேலம்: மகளிர் உரிமைத்தொகை கோரி 44,247 விண்ணப்பம்

சேலம் மாவட்டத்தில் 15.07.2025 முதல் 02.08.2025 வரை நடைபெற்ற ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 37,012 கோரிக்கை மனுக்களும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரிக்கை விண்ணப்பமாக மொத்தம் 44,247 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 6, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 6) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். அவசர உதவிக்கு மாவட்ட கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
News August 6, 2025
கடன் தொல்லையை தீர்க்கும் ஆறகளூர் கோயில்!

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே ஆறகளூரில் காமநாதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வீற்றிருக்கும் கால பைரவர் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக பக்தர்களால் போற்றப்படுகிறார். அஷ்டமி திதியில் 11 தீபங்கள் ஏற்றி கால பைரவரை வழிபட்டு வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கடன் பிரச்சனையில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News August 6, 2025
சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 6) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.