News August 5, 2025
தருமபுரி சிலிண்டர் பயனாளிகள் கவனத்திற்கு…

தருமபுரி மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க.
Similar News
News August 6, 2025
தருமபுரியில் VAO மீது புகார் அளிப்பது எப்படி?

குடிமக்கள் கோரும் சான்றிதழ்களை தராமல் இழுத்தடித்தாலோ, சம்மந்தப்பட்ட கிராமத்தில் VAO வசிக்காவிட்டாலோ VAO மீது தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் (9445000908) எழுத்து பூர்வமாக புகார் அளிக்கலாம். அளிக்கப்படும் புகார்களுக்கு 3 – 7 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். VAO மீது கொடுக்கப்படும் புகார் உறுதி செய்யப்பட்டால், உடனடியாக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, வேறொரு VAO நியமிக்கப்படுவார். ஷேர்!
News August 6, 2025
தருமபுரி: டிகிரி முடித்திருந்தால் போதும்! கை நிறைய சம்பளம்

மத்திய அரசின் காப்பீடு நிறுவனத்தில் உதவியாளருக்கான 500 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 37 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 21 – 30 க்குள் இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாதம் ரூ.22,405 – 62,265 சம்பளம் வரை வழங்கப்படும். விருப்பமுடையவர்கள் வரும் ஆகஸ்ட் 17க்குள் இந்த <
News August 6, 2025
தர்மபுரி மாவட்டத்தின் பெய்த மழை அளவு

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக அரூரில் 42.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கம்பைநல்லூரில் 32.2 மி.மீ, பாப்பிரெட்டிப்பட்டியில் 16 மி.மீ, தீர்த்தமலையில் 6.6 மி.மீ, பாலக்கோடு சுகர்மில்லில் 6.5 மி.மீ மழை பெய்துள்ளது. தருமபுரி மற்றும் ஒகேனக்கல்லில் 3 மி.மீ மழையும், பென்னாகரத்தில் 2 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.