News August 5, 2025
100 ஆண்டுகள் பழமையான கிணறு தூர்வாரும் பணி

திருவெண்காடு அருகே மணிக்கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆகஸ்ட் 29ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் திருப்பணி வேலைகள் நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் உள்ள 100ஆண்டுகள் பழமையான கிணறு துர்ந்து போய் பயன்படுத்த முடியாமல் இருந்த நிலையில் கிணற்றை சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் விரும்பினர். இதனைத் தொடர்ந்து கிணறு தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது.
Similar News
News August 6, 2025
மயிலாடுதுறையில் இப்படி ஒரு வரலாற்று பொருளா?

மயிலாடுதுறை பாரம்பரிய நெசவுத் தொழிலுக்கு பெயர் பெற்றது. குறிப்பாக கூறைநாடு புடவை அல்லது கூறை பட்டு புடவைகள் இங்கு பிரபலமானவையாகும். இந்த சேலை திருமணம் மற்றும் மத சடங்குகளின் ஒரு தவிர்க்க முடியாத ஒன்றாக கருதப்படுகிறது. இது கலாச்சார சார்ந்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்த புடவைகள் சிறிய கட்டங்கள் கொண்ட வடிவமைப்புடன் அழகான தோற்றத்தில் காணப்படுகிறது. தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News August 6, 2025
இரவு ரோந்து பணி போலீசாரின் விபரங்கள் வெளியீடு

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேரங்களில் குற்றச்சம்பவங்கள் குறித்து தகவல் தெரிவிக்கவும் குற்றச்சம்பவங்களிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் குறிப்பிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரின் எண்ணிற்கு நேரடியாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
News August 5, 2025
மயிலாடுதுறை: தேர்வு இல்லை, அரசு வேலை, Apply Now

மயிலாடுதுறை: தமிழ்நாடு அரசில் தேர்வில்லாமல் நல்ல ஊதியத்தில் வேலை வேண்டுமா? மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் “TN Rights” திட்டத்தின் கீழ் பணிபுரிய அறிவிப்பு வந்துள்ளது. ரூ.15,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை மாத சம்பளம் வழங்கப்படும். முதுகலை பட்டம் பெற்று விருப்பமுள்ளர்கள் 13.08.2025 ஆம் தேதிக்குள்ள <