News August 5, 2025

ஈரோடு: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

image

ஈரோட்டில், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

Similar News

News August 6, 2025

சுதந்திர தின விழா குறித்து ஆலோசனைக் கூட்டம்

image

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கத்தில் நேற்று, ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுவது குறித்தான ஆலோசனைக் கூட்டம் அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது‌. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் அரபித் ஜெயின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News August 5, 2025

காவல்துறையினருக்கு இலவச மருத்துவ முகாம்

image

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் A.சுஜாதாவின் உத்தரவின் பேரில், ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்களின் நலன் கருதி இன்று (05.08.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் இலவச இயற்கை மற்றும் யோகா மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், நந்தா இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்றனர்.

News August 5, 2025

ஈரோடு: வட மாநில தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்

image

ஒடிசா மாநிலம், பர்கோச்சா பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் ஜக்தலா, 48. இவர் கடந்த 4 மாதங்களாக சிப்காட் பகுதியில் தங்கி இருந்து  தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் காலை வேலைக்கு சென்றவர் அங்கு மேற்பார்வையாளர் இடத்தில் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியவர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து இறந்து விட்டார். இது குறித்து சென்னிமலை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!