News August 5, 2025
போக்சோ வழக்கில் இளைஞருக்கு கடுங்காவல் சிறை

பெரம்பலூர் மாவட்டம் பீல்வாடி கிராமத்தைச் சேர்ந்த சிறுமியை குழந்தை திருமணம், கற்பழிப்பு செய்ததாக அஜித் (22) என்பவரை போலீசார் கைது செய்து, பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2022-ம் ஆண்டு போக்சோ (ம) குழந்தை திருமண வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நேற்று அஜித்துக்கு 42 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை (ம) 1,50,000 அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது
Similar News
News August 6, 2025
பெரம்பலூர் மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், பெரம்பலூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ், தரிசு நிலங்களை மேம்படுத்தி விளை நிலங்களாக மாற்றி கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News August 5, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ், சினை ஊற்ற கரவை பசுக்களுக்கு 50% மானியத்தில் ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் நடப்பாண்டில் செயல்படுத்தப்பட உள்ளதால், விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர்கள் (ம) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News August 5, 2025
பெரம்பலூர்: ரூ.1.25 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை!

பெரம்பலூர் மக்களே தமிழ்நாடு அரசில் தேர்வில்லாமல் நல்ல ஊதியத்தில் வேலை வேண்டுமா? மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் “TN Rights” திட்டத்தின் கீழ் பணிபுரிய அறிவிப்பு வந்துள்ளது. ரூ.15,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை மாத சம்பளம் வழங்கப்படும். முதுகலை பட்டம் பெற்று விருப்பமுள்ளர்கள் 13.08.2025-குள்ள <