News August 5, 2025

ஆக.21ல் தவெக மாநில மாநாடு

image

மதுரையில் தவெக 2-வது மாநில மாநாடு ஆக.21-ம் தேதி நடைபெறும் என்று விஜய் அறிவித்துள்ளார். 25-ம் தேதி மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஆக.27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி வருவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக முன்கூட்டியே மாநாட்டை நடத்த வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியது. இதனையடுத்து. ஆக.25-ம் தேதிக்கு பதில் 21-ம் தேதி 2-வது தவெக மாநில மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 6, 2025

முதலீடுகளை ஈர்த்ததாக திமுக பொய் பிரச்சாரம்: L.முருகன்

image

முதலீடு​கள் ஈர்க்​கப்​பட்​டுள்​ள​தாக திமுக அரசு போலி விளம்பர பிரச்​சா​ரம் செய்து வரு​கிறதாக மத்​திய இணை அமைச்​சர் L.​முரு​கன் கண்​டனம் குற்றம் சாட்டியுள்ளார். முதலீடு​களை ஈர்ப்​ப​தாக கூறி முதல்​வர் மேற்​கொண்ட வெளி​நாட்டு பயணங்​களால் எந்​தப் பயனும் இல்​லை என தெரிவித்த அவர், கடந்த 4 ஆண்​டு​களில் நடத்​தப்​பட்ட முதலீட்டாளர்​கள் மாநாடு​களாலும் பயனில்​லை என சாடினார்.

News August 6, 2025

BREAKING: ரெப்போ வட்டியில் மாற்றமில்லை

image

ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவீதமாக நீடிக்கும் என ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.5%ஆக இருந்தது. இன்றைய அறிவிப்பில் 0.5% வட்டி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால், வீடு, வாகனம் கடனுக்கான வட்டியிலும் மாற்றமில்லை. வட்டி உயர்த்தப்படாததால் லோன் வாங்கியவர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

News August 6, 2025

தீ விபத்தால் ரத்தானது கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி

image

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டிகள் இன்று ஹையாத் நட்சத்திர விடுதியில் தொடங்க இருந்தது. ஆனால் நட்சத்திர விடுதியில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட எதிர்பாராத தீ விபத்தால் செஸ் போட்டிகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்று தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த போட்டியின் மொத்த பரிசுத் தொகை ஒரு கோடி என அறிவிக்கப்பட்டிருந்தது.

error: Content is protected !!