News August 5, 2025
விருதுநகர் கூட்டுறவு வங்கியில் வேலை… JOB ALERT!

விருதுநகர் இளைஞர்களே, அனைத்து வகையான கூட்டுறவு வங்கித் துறையில் 1000க்கு மேலான உதவியாளர் காலியிடங்களுக்கு நேரடியாக ஆட்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். ஆக. 6 முதல் ஆக. 29க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு <
Similar News
News August 5, 2025
இறுதி கட்டத்தை எட்டியுள்ள மேம்பால பணிகள்

சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணிகள் துவங்கி ஓராண்டாகியுள்ள நிலையில் தற்போது பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ரூ.62 கோடி மதிப்பீட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கிய இப்பணி விறுவிறுப்பாக நடைபெற துவங்கி தற்போது 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளதால் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது.
News August 5, 2025
தொடர் மழையால் பட்டாசு உற்பத்தி பாதிப்பு

சிவகாசி, வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர் சாரல் மழை காரணமாக பட்டாசு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டு வருவது உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பிற்பகல் வரை வெயில் அடித்தாலும் பிற்பகலை தொடர்ந்து மழை பெய்து வருவதால் உற்பத்தி பாதித்துள்ளது.
News August 5, 2025
வேப்பிலைக்காரி அலங்காரத்தில் துர்க்கை பரமேஸ்வரி அம்மன்

சிவகாசி பேருந்து நிலைய பகுதியில் உள்ள ஸ்ரீ துர்க்கை பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று ஆடிமாதம் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ வேப்பிலைக்காரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வேப்பிலையால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றதை தொடர்ந்து கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.