News August 5, 2025

JOB ALERT மதுரை கூட்டுறவு வங்கியில் வேலை

image

மதுரை இளைஞர்களே, அனைத்து வகையான கூட்டுறவு வங்கித் துறையில் 1000க்கும் மேலான உதவியாளர் காலியிடங்களுக்கு நேரடியாக ஆட்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். மதுரைக்கு சுமார் 60க்கு மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. ஆக. 6 முதல் ஆக. 29க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு இங்கே<> கிளிக் செய்து<<>> பார்க்கலாம். இதற்கான எழுத்துத் தேர்வு செப். 12ல் நடைபெறும். அரசு வேலையில் தேடுவோருக்கு SHARE செய்யவும்.

Similar News

News August 5, 2025

திருப்பரங்குன்றம் முருகனுக்கு வைரம் பதித்த வேல் வழங்கல்

image

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு வைரம் பதித்த வேல் வழங்கப்பட்டுள்ளது. இது பற்றி கோவில் நிர்வாகத்தின் அறிக்கையில், இத்திருக்கோயிலுக்கு சுமார் 770 கிராம் எடை கொண்ட தங்க வைர ஜாதி சிகப்பு கல், ஜாதி பச்சை கல் பதித்த தங்கவேல் ( CULTURAL SAMSKRITHI FOUNDATION ) என்ற உபயதாரர் மூலம் பெறப்பட்டது என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்பட்டுள்ளது.

News August 5, 2025

மதுரை: தவெக மாநாடு தேதி மாற்றம்..!

image

மதுரையில் நடக்கவுள்ள தவெகவின் 2 ஆவது மாநில மாநாடு, பல்வேறு மாற்றங்களுக்கு பின்னர் ஆகஸ்ட் 21 ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மாநாட்டிற்கு வருகை தரும் தொண்டர்கள் மிகவும் பாதுகாப்புடனும், பொறுப்புணர்வுடனும் கலந்து கொள்ளுமாறு தவெக தலைவர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.

News August 5, 2025

மதுரையில் வைகை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

image

வைகை அணை நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையாலும், முல்லைப் பெரியாரின் நீர் வரத்தாலும் வைகை அணை நீர்மட்டம் 69 அடி எட்டிய நிலையில், நீர்வளத்துறை சார்பில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட வைகை கரையோர மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஆற்றங்கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தபட்டுள்ளது.

error: Content is protected !!