News August 5, 2025

செங்கல்பட்டில் ரயில்வே வேலை!

image

செங்கல்பட்டு மக்களே, இந்திய ரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர்- 5623, டிக்கெட் சூப்பர்வைசர்- 6235, ரயில் மேனேஜர்- 7367, அக்கவுண்ட் அசிஸ்டெண்ட்- 7520, கிளர்க்- 7367 என மொத்தம் 30,307 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு டிகிரி படித்திருந்தாலே போதும். ரூ.29,000 முதல் ரூ.35,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு மேல்தான் <>இந்த இணையத்தளத்தில் <<>>விண்ணப்பிக்க முடியும். சேவ் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க!

Similar News

News August 6, 2025

செங்கல்பட்டு: உங்களுடன் ஸ்டாலின் முகாம் விபரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் தாம்பரம், மதுராந்தகம், செயின்ட் தாமஸ், லத்தூர் பகுதிகளில் நடைபெற உள்ளது. முழுமையான முகவரியை தெரிந்து கொள்ள இங்கு <>கிளிக்<<>> செய்யவும். இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற அரசின் சேவைகளில் குறை இருந்தால் மனுவாக அளித்து 45 நாட்களில் தீர்வு பெறலாம். ஷேர் பண்ணுங்க.

News August 5, 2025

செங்கல்பட்டு மாவட்ட குறுவட்ட தடகள போட்டிகள்

image

செங்கல்பட்டு குறுவட்ட தடகளப் போட்டி இன்று எஸ்ஆர்எம் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. குறுவட்ட தடகள போட்டிகளில் 34 பள்ளிகள் 680 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் தலைமை தாங்கினார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார்.

News August 5, 2025

ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு

image

எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனால், தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த ரயில்கள் தற்போது மீண்டும் எழும்பூரில் இருந்து இயக்கப்படவுள்ளது. அதன்படி சென்னை எழும்பூர்- மதுரை தேஜஸ் ரயில், எழும்பூர்- புதுச்சேரி மெமு விரைவு ரயில்கள் மீண்டும் எழும்பூரில் இருந்து இயக்கப்படுகிறது.

error: Content is protected !!