News August 5, 2025
நாமக்கல்: 10th முடித்தால் மத்திய அரசு வேலை!

நாமக்கல் மக்களே.., 10ஆவது முடித்தால் எல்லை பாதுகாப்புப் படையில் Constable(Tradesman), carpenter, plumber, painter, electrician,cook, Tailor உள்ளிட்ட பல பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவதி, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.21,700 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆக.25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க <
Similar News
News August 5, 2025
நாமக்கல்லில் நாளை முகாம் நடைபெறும் இடங்கள்!

நாமக்கல் மாவட்டத்தில் நாளை (06.08.2025) புதன்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்: நாமக்கல் என்.கொசவம்பட்டி என்.ஆர்.எல் திருமண மஹால், திருச்செங்கோடு ஆனங்கூர் சூரியம்பாளையம் செங்குந்தர் திருமண மண்டபம், காளப்பநாயக்கன்பட்டி துத்திக்குளம் கலைவாணி திருமண மண்டபம், நாமகிரிப்பேட்டை வட்டாரம் ஆயில்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News August 5, 2025
நாமக்கல்: தேர்வில்லாமல் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை!

நாமக்கல் மக்களே, தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் “TN Rights” திட்டத்தின் கீழ் பணிபுரிய உதவியாளர், தட்டச்சர், சீனியர் கணக்காளர் உள்ளிட்ட 25 பதவிகளுக்கு தேர்வில்லாமல் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சம்பளமாக ரூ.15,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News August 5, 2025
சிறப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்!

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இன்று (ஆக.5) காலை 10:30 மணியளவில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆஞ்சநேயருக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்து வருகின்றனர்.