News April 6, 2024

தீப்பெட்டி சின்னத்தை தேர்வு செய்தது ஏன்?

image

தீப்பெட்டி சின்னத்தை தேர்வு செய்தது ஏன் என்பது குறித்து மதிமுக பொது செயலாளர் வைகோ பரபரப்பு பேட்டியளித்துள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி 74 வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை அவர் வெளியிட்டார். பின்னர் பேட்டியளித்த அவர், கட்சியின் தனித்தன்மையை பாதுகாக்க தனி சின்னத்தை தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாகவும், ஆதலால் தீப்பெட்டி சின்னத்தை தேர்வு செய்ததாகவும் தெரிவித்தார்.

Similar News

News March 16, 2026

தவெகவுக்கு ரஜினி ரசிகர்கள் எச்சரிக்கை

image

ரஜினி குறித்த ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்துக்கு மன வலிமை இல்லை என்று பேசியதற்காக ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்கள் கூறினர். தவறும் பட்சத்தில் 234 தொகுதிகளிலும் உள்ள ரஜினி ரசிகர்களும் தவெகவிற்கு எதிராக பூத் அளவில் போர்க்கொடி தூக்குவார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News March 16, 2026

ஆஸ்கர் விருது வென்ற இந்திய வம்சாவளி இயக்குநர்!

image

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அலெக்ஸாண்ட்ரே சிங் தற்போது உலக சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். தனது மனைவி Natalie Musteata உடன் இணைந்து இவர் இயக்கிய ‘Two People Exchanging Saliva’ என்ற பிரெஞ்சு குறும்படம் Best Live Action Short Film பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. பிரான்ஸின் போர்டோ நகரில் பிறந்த இவர், The Appointment (2019), Plan large (2016) போன்ற குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.

News March 16, 2026

விஜய் கட்சியில் இணைந்தார்.. டிடிவி தினகரன் அதிர்ச்சி

image

தேர்தலையொட்டி மாற்றுக் கட்சி நிர்வாகிகளை இழுக்கும் வேலையில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், அமமுகவின் திருவள்ளூர் மாவட்ட அவைத் தலைவர் சு.சம்பந்தம் தவெகவில் இணைந்துள்ளார். புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் அவர் தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டுள்ளார். இது தேர்தல் நேரத்தில் TTV தினகரன் தரப்புக்கு பின்னடைவாக அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!