News August 5, 2025
நீலகிரி: புதிய வீடு கட்டுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் வணிக மற்றும் குடியிருப்பு கட்டடங்களுக்கு கட்டட அனுமதி பெற விரும்பும் பொதுமக்கள், <
Similar News
News August 5, 2025
நீலகிரி: நாளை நடைபெறும் முகாம் விபரம்

நீலகிரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் கடந்த மாதம் 15ஆம் தேதி முதல் நீலகிரியில் உள்ள ஆறு தாலுகாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலூர் ஊராட்சி கொலக்கம்பை பகுதி மக்களுக்கு சிஎஸ்ஐ பள்ளி மைதானத்திலும், நெடுங்குளா பகுதி மக்களுக்கு மிலிதேன் ஊராட்சி சமுதாய கூடத்திலும், பாலகொல பகுதி மக்களுக்கு தேணாடு சமுதாய கூட்டத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நாளை நடைபெற உள்ளது.
News August 5, 2025
சிறப்பு மலை ரயில்: புறப்படும் நேர விபரங்கள்

சுதந்திர தினத்தை ஒட்டி இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில் ஐந்து பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு மலை ரயிலில் மொத்தம் உள்ள 210 இருக்கைகளில் 80 இருக்கைகள் முதல் வகுப்பும், 130 இருக்கைகள் இரண்டாம் வகுப்பில் இருக்கும். குன்னூரில் இருந்து காலை 8.20 புறப்படும், ரயில்9.40 மணிக்கு ஊட்டி வந்தடையும். மாலை 4.45 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்படும் ரயில் மாலை 5.55 மணிக்கு மீண்டும் குன்னூர் சென்றடையும்.
News August 5, 2025
முகாமினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

நீலகிரி மாவட்டம் உதகை நகாராட்சிக்குட்பட்ட ஒக்கலிகர் மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது ஊட்டி நகராட்சி மன்ற தலைவர் வாணிஸ்வரி உடன் இருந்தார். திரளான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.