News August 5, 2025
நாமக்கல்: கல்லூரி மாணவன் சாதனை

நாமக்கல்: பெரியார் பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது அண்மையில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்தத் தடகள போட்டியின் ஒரு பகுதியான நடைபோட்டியில் 20 கி.மீ பிரிவில் கலந்து கொண்ட, ராசிபுரம் முத்தாயம்மாள் கல்லூரி மாணவன் சேர்ந்த எம். ஸ்ரீராம் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.
Similar News
News August 5, 2025
நாமக்கல்: தேர்வில்லாமல் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை!

நாமக்கல் மக்களே, தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் “TN Rights” திட்டத்தின் கீழ் பணிபுரிய உதவியாளர், தட்டச்சர், சீனியர் கணக்காளர் உள்ளிட்ட 25 பதவிகளுக்கு தேர்வில்லாமல் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சம்பளமாக ரூ.15,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News August 5, 2025
சிறப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்!

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இன்று (ஆக.5) காலை 10:30 மணியளவில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆஞ்சநேயருக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்து வருகின்றனர்.
News August 5, 2025
நாமக்கல்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL!

நாமக்கல் மக்களே.., வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில், வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE