News August 5, 2025

திருச்சி மாவட்டம் 3-ம் பிடித்து அசத்தல்

image

தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் நடப்பாண்டு 1-ஆம் வகுப்பில் மட்டும் 2,75,459 மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா். இந்நிலையில் மாணவா் சோ்க்கை அடிப்படையில் 8,571 மாணவா்களுடன் தென்காசி மாவட்டம் முதலிடத்தையும், 8000 மாணவா்களுடன் திண்டுக்கல் மாவட்டம் இரண்டாம் இடத்தையும், 7,711 மாணவா்களுடன் திருச்சி மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Similar News

News August 5, 2025

புனித பயணம் மேற்கொள்ள மானியம்- ஆட்சியர் அறிவிப்பு

image

பௌத்த மதத்தை சேர்ந்தவர்கள் நாக்பூர் தீக் ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர திருவிழாவிற்கு புனித பயணம் சென்று வரும் 150 நபர்களுக்கு மானியமாக ரூ.5000 வழங்கப்படுகிறது. இதனை பெறுவதற்கு நவம்பர் 30-ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்று சென்னைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News August 5, 2025

திருச்சியில் திருமாவளவன் பேட்டி

image

திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ‘தேசிய ஜனநாயக கூட்டணி இன்னும் கூட்டணியாகவே உருவாகவில்லை. அதில் பாஜக-அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே உள்ளன. அந்த கூட்டணியிலே தொடர்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட கட்சிகள் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி வருவது அவர்களின் உறுதிபாடு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை காட்டுகிறது’ என்றார்.

News August 5, 2025

திருச்சி: எம்எல்ஏ-க்களின் மின்னஞ்சல் முகவரி விவரங்கள்

image

▶️ திருச்சி மேற்கு – கே.என்.நேரு (mlatiruchirappalliwest@tn.gov.in)
▶️ திருச்சி கிழக்கு – இனிகோ இருதயராஜ் (mlatiruchirappallieast@tn.gov.in)
▶️ திருவெறும்பூர் – அன்பில் மகேஷ் பொய்யாமொழி (mlathiruverumbur@tn.gov.in)
▶️ மணப்பாறை – அப்துல் சமது (mlamanapparai@tn.gov.in)
▶️ ஸ்ரீரங்கம் – பழனியாண்டி (mlasrirangam@tn.gov.in)
▶️ இந்த தகவலை மறக்காமல் SHARE செய்யவும். பாகம்-2 ஐ காண <<17307802>>இங்கே க்ளிக்<<>> செய்யவும்

error: Content is protected !!