News April 6, 2024

ரோபோட் டாக்சியை களமிறக்குகிறது டெஸ்லா

image

அமெரிக்காவை சேர்ந்த மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, ஆகஸ்ட் மாதம் ரோபோட் டாக்சியை களமிறக்க போவதாக அறிவித்துள்ளது. உலகில் தற்போது ஓடும் வாகனங்கள் டிரைவர்கள் மூலம் இயக்கப்படுகின்றன. இதற்குப் பதிலாக ரோபாட் மூலம் இயக்கப்படும் டாக்சியை அறிமுகப்படுத்த விரும்புவதாக மஸ்க் கூறி வந்தார். இந்நிலையில் அவரது எக்ஸ் பக்க பதிவில், ஆகஸ்ட் 8இல் ரோபோட் டாக்சியை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறியுள்ளார்.

Similar News

News February 3, 2026

அப்பா இறந்துவிட்டார்.. கார் ஓட்டுநரின் பலே மோசடி

image

பிறரின் அனுதாபத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கில் கொள்ளையடித்த சென்னை கார் டிரைவர் வசமாக சிக்கினார். கார் பயணத்தின் போது அந்நபரின் போனில், உன் அப்பா இறந்துவிட்டார்; பணம் தேவைப்படுகிறது என வாய்ஸ் ஒலித்துள்ளது. செய்வதறியாமல் அவர் நடிப்பதை நம்பி ஒவ்வொரு பயணியும் ₹10000, ₹20000 தந்து உதவியுள்ளனர். இவரது நாடகத்தை கண்டுபிடித்த வக்கில் ஒருவர் போலீசில் புகாரளித்திட, குற்றத்தை கார் ஓட்டுநர் ஒப்புக்கொண்டார்.

News February 3, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶பிப்ரவரி 3, தை 20 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: துவிதியை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்

News February 3, 2026

வங்கியில் 418 பணியிடங்கள்.. ₹48,480 சம்பளம்

image

பேங்க் ஆஃப் பரோடாவில் ஐடி பிரிவில் காலியாக உள்ள 418 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளுக்கு B.E, B.Tech, M.Tech, M.E, MCA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். சம்பளமாக ₹48,480 முதல் ₹1,05,280 வரை வழங்கப்படும். விருப்பமுள்ள நபர்கள் பிப்.19-க்குள் இந்த <>லிங்கில்<<>> விண்ணப்பிக்கவும்.

error: Content is protected !!